மகாராஷ்டிராவில் பெய்யும் கன மழை - ஆரஞ்சு அலர்ட் !!
கன மழை
மகாராஷ்டிராவில் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை கனமழை முதல் மிகக் கனமழை (115.6 முதல் 204.4 மிமீ வரை) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால். நேற்று இரவு பெய்த மழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மும்பையில் உள்ள அந்தேரி சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவில் பெய்த கனமழையால் சில பொது போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர் மழை காரணமாக, மும்பை மாநகரப் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி நிரம்பி இருக்கிறது.