மருத்துவமனைகளை பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் - இந்திய மருத்துவர்கள் சங்கம்(IMA) அதிரடி கோரிக்கை!

மருத்துவமனைகளை பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் -  இந்திய மருத்துவர்கள் சங்கம்(IMA) அதிரடி கோரிக்கை!

இந்திய மருத்துவ சங்கம்

இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ள நாடு தழுவிய மருத்துவர்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் தொடங்கியது.

கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெண் டாக்டர் கொலை வழக்கில் இந்திய மருத்துவ சங்கம் 5 நிபந்தனைகள் விடுத்துள்ளனர்:

விமான நிலையங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை போலவே, மருத்துவமனைகளுக்கும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும்.

இந்த வழக்கை குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 14 அன்று அத்துமீறி நுழைந்து ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உயிரிழந்த பெண் மருத்துவர் வேலை செய்து வந்த 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு சூழலை மேம்படுத்தும் வகையில் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழக்கப்பட்ட கொடுமைக்குக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை வன்முறையில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என IMA 5 நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது.


Tags

Next Story