தமிழ்நாட்டிற்காகவும் பாடுபடும் எம்.பி.யாக இருப்பேன்: சுரேஷ் கோபி!
சுரேஷ் கோபி
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, இன்று டெல்லி செல்லவுள்ள அவர் அதற்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருச்சூர் வாக்காளர்கள் என்னை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்தால், நான் திருச்சூருக்குள்ளேயே செட்டில் ஆகி விடமாட்டேன். கேரளாவுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும் சேர்த்து பாடுபடும் எம்.பி.யாக இருப்பேன்.'' என தெரிவித்துள்ளார்.
Next Story