சனாதனத்தை ஒழிப்பதே "இந்தியா" கூட்டணியின் நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி
மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கு ஒரு தலைவர் இல்லை. எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள். இந்திய கலாச்சாரத்தை தாக்க மறைமுக செயல்திட்டத்துடன் இந்தியா கூட்டணி வந்துள்ளது.
சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதலாகும். யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துகொண்டே செல்லும் எனக் கூறினார்.
Tags
Next Story