இந்தியா கூட்டணி வெல்வது உறுதி - செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணி வெல்வது உறுதி - செல்வப்பெருந்தகை!

செல்வப்பெருந்தகை

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி என சென்னையில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், ''தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து முகவர்கள் கவலை கொள்ளக் கூடாது. பாஜக ஆட்சி நாளை முடிவுக்கு வரப்போகிறது. கலைஞர் கருணாநிதி ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல் பிறக்க இருக்கிறது. அவர் இறந்துவிட்டாலும் அரசியலில் எல்லோரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இது தேர்தல் கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எங்கே உள்ளது என்று தேட வேண்டிய நிலைமை உள்ளது. ஒரு உள்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர்களை மிரட்டுகிறார்.

2004ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக்கணிப்பு வந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நாளை புதிய விடியல் ஏற்படும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜக 150 இடங்களை மட்டுமே பிடிக்கும்'' என்றார்.

Tags

Next Story