இந்தியாவின் தேர்வு முறையே மோசடி : நீட் குறித்து ராகுல் காந்தி ஆவேசம்

இந்தியாவின் தேர்வு முறையே மோசடி : நீட் குறித்து ராகுல் காந்தி ஆவேசம்

ராகுல் காந்தி 

18-வது லோக்சபாவின் 2-வது கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நீட் தேர்வு மோசடிகள் விவகாரத்தை கிளப்பினார் ராகுல் காந்தி. லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்று கவலையுடன் உள்ளனர், இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

நாட்டின் தேர்வு முறையே மோசடியானதாக உள்ளது. வசதி படைத்தவர்கள், பணம் வைத்திருப்பவர்களால் இந்திய தேர்வு முறையையே விலைக்கு வாங்க முடியும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. நீட் உள்ளிட்ட முதன்மையான தேர்வு முறைகளில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தம்மைத் தவிர மற்றவர்களை குறைசொல்கிறார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

Tags

Next Story