இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் ரூ.185.27 லட்சம் கோடி!

இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் ரூ.185.27 லட்சம் கோடி!

இந்திய கடன் 

கடந்த 6 நிதியாண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் 93.26 லட்சம் கோடியில் இருந்து 2 மடங்காக உயர்ந்து தற்போது ₹ 171.78 லட்சம் லட்சம் கோடியாக உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மொத்தக் கடன் ₹ 171.78 லட்சம் கோடியாக இருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58%ஆகும். அடுத்த நிதியாண்டில் நமது நாட்டின் கடன் மேலும் அதிகரித்து ₹ 185 லட்சம் கோடியை எட்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியம் கடந்த ஏப்ரல் மாதம் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-24ஆம் ஆண்டிலேயே 3.57 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story