விண்கலன்களை இணைக்கும் நிகழ்வை மீண்டும் ஒத்திவைத்தது இஸ்ரோ!!
Isro
இரு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன் 24 ஆய்வுக்கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரு விண்கலன்களும் பூமியில் இருந்து 475 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இதையடுத்து, இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணி ஜனவரி 9-ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சில தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக திட்டமிட்டபடி விண்கலன்கள் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.