கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. இதுதான் காரணம்!

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. இதுதான் காரணம்!

ரயில் விபத்து 

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் இருந்து 5 பெட்டிகள் வரை சேதமடைந்தன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தற்போது கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்தில் புறப்படாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. ராணி பத்ரா - சட்டர் ஹட் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சிக்னல் பழுதடைந்த நிலையில், அங்கு ஒரு நிமிடம் நின்றுவிட்டு பத்து கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிக்னலில் நிறுத்திய பின் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படாத நிலையில், அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story