காட்டுத்தீயாக பரவி வரும் கர்நாடக ஆபாச வீடியோ சர்ச்சை - தேவகவுடா பேரன்? தப்பி ஓட்டம் !!

காட்டுத்தீயாக பரவி வரும் கர்நாடக ஆபாச வீடியோ சர்ச்சை - தேவகவுடா பேரன்? தப்பி ஓட்டம் !!

பிரஜ்வல் ரேவண்ணா

ஆபாச வீடியோ சர்சையில் சிக்கிய தேவகவுடா பேரனுமான மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை, கர்நாடகாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இவர் 300- க்கும் மேற்ப்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி இப்போது காட்டு தீயாக பரவி சமூக வலைதளங்களில் (வாட்ஸ் அப் ) வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் ஹாசன் தொகுதி வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதிக்கு, முந்தைய நாளில் இருந்து இந்த வீடியோக்கள் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோக்கள் பதிவில் இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பபட்டு இருந்தனர்.

இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் சர்சையில் சிக்கி நிலை குலைந்து உள்ளனர். ஜேடிஎஸ் கட்சியின் தேர்தல் ஏஜெண்ட் பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்த நிலையில் அதில், "நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச வீடியோக்களை அனுப்பி வைக்கிறார். இவை அனைத்தும் போலியானவை, மார்பிங் செய்யப்பட்டவை. பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயரைக் கெடுக்கவே இத்தகைய போலி ஆபாச வீடியோக்களை பரப்பி விடுகின்றனர்" என கூறியிருந்தார்.

மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தை எஸ்.ஐ.டி. விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவுயிட்டதையடுத்து கர்நாடக மாநில மகளிர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’என தெரிவித்திருந்தார்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தேர்தலில் கடும் நெருக்கடி ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

ஆபாச வீடியோ விவகாரம் குறித்து தேவகவுடா குடும்பம், செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர் . இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடகாவில் மிக பரபரப்பாக பரவி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story