கேரளாவுக்கு இன்றும் ரெட் அலர்ட் : விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்!

கேரளாவுக்கு இன்றும் ரெட் அலர்ட் : விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்!

கேரளா

வயநாட்டில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு

வயநாட்டில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு கேரளா விரைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய கேரள அமைச்சர்

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதியில் விபத்துகுள்ளானது.

விபத்தில் சிக்கிய அமைச்சர் வீணா ஜார்ஜ் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவுக்கு இன்றும் ரெட் அலர்ட்

கேரளாவில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

கேரள வெள்ள பாதிப்புகள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசினார்.

கேரளாவிற்கு முதற்கட்டமாக 5 கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கேரளாவிற்கு எல்லா விதமான உதவிகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Tags

Next Story