பாஜக வேட்பாளரும், அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் குமாரசாமியின் கருத்து !!!

பாஜக வேட்பாளரும், அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் குமாரசாமியின் கருத்து !!!

குமாரசாமி

ஹாசன் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் தவறு செய்தால் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை எனவும் விசாரணை முடிந்த பிறகு கருத்து தெரிவிப்பதாக குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சி எம்பி ஆக பிரஜ்வல் ரேவண்ணா உள்ளார். இவர் முன்னால் பிரதமர் தேவகவுடாவின் பேரன் அதாவது தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் ஆவார்.

ரேவண்ணாவின் உடன் பிறந்த தம்பிதான் முன்னாள் முதல்வர் குமாரசுவாமி லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதை அடுத்து பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். ஹாசன் தொகுதிக்கு கடந்த 26 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் பிரஜோல் ரேவண்ணா ஆபாச வீடியோ காட்சியில் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார்.

பல பெண்களுடன் நெருக்கமாகவும் உள்ள வீடியோக்கள் வாட்ஸ் ஆப் களில் பரவி வருகிறது. மேலும் உதவி கேட்டு வரும் பெண்கள் மற்றும் பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்த வீடியோ பென் டிரைவில் வைத்திருந்ததாகவும் அந்த வீடியோ தான் வெளியானது என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் குமாரசாமியின் கருத்து என்னவென்றால் இவை அனைத்தும் மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என்று பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு இதனை மறுத்துள்ளது.

இந்த ஆபாச வீடியோ தொடர்பாக எஸ்ஐடி என்னும் சிறப்பு விசாரணை குழு அமைக்க சித்திரம்மையா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் குமாரசாமி கூறப்பட்டதாவது; நானாக இருந்தாலும் சரி எனது தந்தை தேவ கவுடாவாக இருந்தாலும் சரி பெண்களை மரியாதை ஆகவே நடத்தியுள்ளோம் யாராவது பாதிக்கப்பட்டு வந்திருந்தால் அவர்களைப் பிரச்சனைகளை தீர்க்கவே முயற்சி செய்திருக்கிறோம்.

ஹாசன் விவகாரத்தில் விசாரணையின் உண்மைகள் வெளிவரட்டும் யாராக இருந்தாலும் சரி தவறு செய்திருந்தால் சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் தவறு செய்தவர்களையும் மன்னிக்க வேண்டும் என்ற சொல்லுக்கே இடம் இல்லை எனவே விசாரணை உண்மை வெளிவரட்டும் அதன் பிறகு என் கருத்துக்களை நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் பிரஜ்வல் ரேவண்ணா தப்பி ஓடிவிட்டார் என்று கேட்டபோது இதில் எனக்கு சம்பந்தம் இல்லை சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நான் ஒன்றும் சொல்ல முடியாது அதிகாரிகள் பணியை தொடங்கட்டும் அவர் வெளிநாடு சென்று இருந்தாலும் சரி அவரை திரும்ப கொண்டு வருவது அவர்களின் பணி அவர்கள் பிரஜ்வல் ரேவண்ணாவை அழைத்து வருவார்கள் கவலைப்பட வேண்டாம் என கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story