நீட் தேர்வில் குளறுபடியா? - கல்வித்துறை விளக்கம்

நீட் தேர்வில் குளறுபடியா? - கல்வித்துறை விளக்கம்

மத்திய கல்வி அமைச்சகம்

நீட் தேர்வில் 720க்கு 718 மற்றும் 719 மதிப்பெண்களை மாணவர்களை பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை.

6 மையங்களில் கேள்வித்தாள் தவறாக வழங்கப்பட்டதால் 30 நிமிடங்கள் தாமதமாக தேர்வு தொடங்கியது. குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்பட்டதாக மாணவர்கள் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரைப்படி கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது.

கருணை மதிப்பெண்கள் வழங்கியதால்தான் முழு மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கருணை மதிப்பெண்களால்தான் 718, 719 என மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.

நீட் தேர்வு குறித்த மாணவர்களின் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

6 தேர்வு மையங்களில் மட்டுமே பிரச்சனை என்பதால் மறு தேர்வு நடத்த வேண்டியதில்லை என நீட் தேர்வில் குளறுபடி குறித்து மத்திய கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Tags

Next Story