பிரதமராக பதவியேற்கும் மோடி?

பிரதமராக பதவியேற்கும் மோடி?

modi

543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

வரும் 9ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், 9ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமராக பதவியேற்கிறார் மோடி.

Tags

Next Story