''வயநாட்டு தொகுதியில் என்னுடைய சகோதிரி பிரியா காந்தி போட்டியிடுவார்'' - ராகுல் காந்தி !
ராகுல் காந்தி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற பெற்றார். இந்நிலையில், தி ரேபரேலி தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டு வயநாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விதிமுறைகள் படி, ஒருவர் 2 தொகுதியில் போட்டியிடலாம். போட்டியிட்ட அந்த 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன் காரணமாக தான் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் தி ரேபரேலி தொகுதியைத் தக்க வைத்துக்கொள்வதாகவும், வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாகவும் ராகுல் காந்தி அறிவித்தார். இதனையடுத்து, வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி ” எனக்கு வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுடன் உணர்வுபூர்வமான தொடர்பு எப்போதுமே இருக்கும். வயநாட்டில் கடந்த 5 -ஆண்டுகளாக நான் எம்பியாக இருந்துள்ளேன். கடினமான சூழ்நிலையில் இருந்தபோதெல்லாம் எனக்கு வயநாடு மக்கள் ஆதரவை கொடுத்துள்ளனர். என் மீது அவர்கள் அன்பை பொழிந்ததற்கு நான் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
வயநாட்டு தொகுதியில் என்னுடைய சகோதிரி பிரியா காந்தி போட்டியிடுவார். நானும் அங்கு அடிக்கடிச் செல்வேன். கண்டிப்பாக வயநாடு தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். எப்போதுமே என்னுடைய வாழ்க்கையில் வயநாட்டு தொகுதி மக்களுக்காக கதவு திறந்தே இருக்கும். இந்த முடிவு சற்று கடினமாக தான் இருக்கிறது” எனவும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.