நீட் தேர்வு ரத்து செய்யப்படாது - தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது - தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்

தர்மேந்திர பிரதான்

நீட் மற்றும் நெட் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்,நீட் தேர்வில் ஏதோ ஒரு பகுதியில் நடந்த முறைகேடு காரணமாக, நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய மத்திய அமைச்சர், நீட் தேர்வில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

“டார்க் வெப்” இணையதளத்தில் ‘நெட்’ வினாத்தாள் கசிந்ததால் நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகக் கூறிய தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை நடைமுறைகளை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக உயர்மட்டக் குழு அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story