ஒரே விமானத்தில் நிதிஷ் - தேஜஸ்வி! I.N.D.I.A உடன் பயணம் தொடர உள்ளதா?
நிதிஷ் - தேஜஸ்வி
கடந்த ஜூன் மாதத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி அமைய ஆணிவேராக இருந்தவர் நிதிஷ்குமார்.
டிசம்பர் மாதம் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வி அடைந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து பாஜக கூட்டணிக்கு நிதிஷ் தாவினார். இதனால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக ஆதரவு உடன் மீண்டும் பீகார் முதலமைச்சர் ஆனார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
இத்தகைய சூழலில் அவர் இந்தியா கூட்டணி ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவுடன் ஒரே விமானத்தில் டெல்லி செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story