கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்

கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்

பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்

கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ''2023 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தேன். புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை கவனித்தேன். அவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தேன். அதை உறுதி செய்யும் வகையில் இந்த உத்தரவை பிறப்பிக்கிறேன்.

ஏப்ரல் 1, 2006க்கு முன்பாக அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு பணி ஆணை வழங்கி வேலையில் அமர்த்தப்பட்டவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகிறது. இதன்மூலம் 13 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.''

இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியை உரிய நேரத்தில் நிறைவேற்றி அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Tags

Next Story