"ஒரே நாடு ஒரே தேர்தல்" - ராம்நாத் கோவிந்த் பரிந்துரைகள் ஒப்படைப்பு!
திரௌபதி முர்மு - ராம்நாத் கோவிந்த்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எட்டு தொகுதிகள் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு ஒப்படைத்திருக்கிறது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்கலின் 4120 சட்டப்பேரவை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான பரிந்துரைகள்:
ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களில் சட்ட ஒப்புதல் அவசியம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அடையாள அட்டையை தயாரிக்க 50 சதவீதம் மாநிலங்களில் ஒப்புதல் அவசியம்.
தொங்கு சட்டசபை, ஆட்சி கவிழ்ந்தால் , எஞ்சிய பதவி காலத்திற்கு இடைத்தேர்தல் நடத்த பரிந்துரை.
மக்களவை சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த உயர்மட்ட குழு பரிந்துரை.
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது சாத்தியமே என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டத்தில் திருத்தங்களை செய்யவும் பரிந்துரை.
மக்களவை சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என பரிந்துரை.
ஒரே நாடு ஒரே தேர்தலால் ஏற்படக்கூடிய தாக்கம் பலன்கள் குறித்தும் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.