நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2024: பாஜக முன்னிலை
பாஜக முன்னிலை
18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிக்ள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
Next Story