தொன்மையான தமிழ் மொழியால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

தொன்மையான தமிழ் மொழியால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

modi

தொன்மையான தமிழ் மொழியால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 117-வது நிகழ்ச்சி இன்று ஒலி பரப்பானது. இந்த ஆண்டின் கடைசி 'மன் கி பாத்' உரையில் பேசிய மோடி, அடுத்த ஆண்டு முதல்முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. மீடியா, பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான்கள், படைப்பாற்றல் உலகைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன மரபுடன் இணைக்க ஏதுவாக constitution75.com என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது. உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும். இது எங்களுக்கு பெருமையான விஷயம். உலக நாடுகளில் தமிழ்மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பிஜியில் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் பிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் மொழி கற்பிப்பது இதுவே முதல் முறையாகும். பிஜி நாட்டு மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கலை முதல் ஆயுர்வேதம் வரையிலும், மொழியில் இருந்து இசை வரையிலும் உலகில் முத்திரை பதித்து கொண்டு இருக்க இந்தியாவில் நிறைய இருக்கிறது. இந்த குளிர்காலத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி தொடர்பானவை நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. காஷ்மீரில் பனி சறுக்கு முதல் குஜராத்தில் பட்டம் விடுதல் போட்டி வரை விளையாட்டுக்கான உற்சாகம் காணப்படுகிறது. சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக பிரசாரம் செய்யப்படுகிறது. காய்கறிக்காக ஒரு காலத்தில் விவசாயிகள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று ஒடிசாவின் கலஹண்டியின் கோல் முண்டா காய்கறி மையமாக மாறியுள்ளது. இது 45 பெண் விவசாயிகள் உள்பட200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

Tags

Next Story