திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; போலீஸ் டி.எஸ்.பி., தேவஸ்தான அதிகாரி சஸ்பெண்டு!!

திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; போலீஸ் டி.எஸ்.பி., தேவஸ்தான அதிகாரி சஸ்பெண்டு!!

பணியிடை நீக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் டி.எஸ்.பி., தேவஸ்தான அதிகாரி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சுப்பா ராயுடு, தலைமை பாதுகாப்பு விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீதர், ஜே.இ.ஓ கவுதமி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் 6 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தற்காலிக வேலை வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் ஏழுமலையானின் பக்தர்களிடம் இரு கரங்களையும் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உயிர் இழந்தவர்களின் வீடுகளுக்கு தேவஸ்தான நிர்வாகிகள் சென்று தவறுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Tags

Next Story