வாரணாசி செல்லும் பிரதமர் மோடி !
மோடி
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று, PM-கிசான் திட்டத்தின் 17வது தவணையை விநியோகிக்க உள்ளார்.
3வது முறை வெற்றி பெற்ற பிரதமர் மோடி இன்று (ஜூன்-18) தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார். இங்கு இரவில் கங்கை நதியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
காலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார். வருமானம் குறைவான விவசாயிகளுக்கு உதவும் விதமாக நிதி வழங்கும் திட்டத்திற்கென முதல்கட்டமாக ரூ. 20 ஆயிரம் கோடியை வழங்கிட அனுமதி அளிக்கிறார்.
இதன் மூலம், 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள்.
கிருஷி சாகிகளாகப் பயிற்சி பெற்ற 30,000க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்களுக்கு, துணை விரிவாக்கப் பணியாளர்களாகப் பணியாற்றும் சான்றிதழ்களையும் பிரதமர் மோடி இன்று வெளியிடுவார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பல மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.