ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு!!
Southern Railway
ரெயில்களில் பயணசீட்டு முன்பதிவு செய்துகொள்ளும் காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரெயில்வே துறை குறைத்துள்ளது.
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் ரெயில் பயணம் செய்பவர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே ரெயில்களில் பயணசீட்டை முன்பதிவு செய்து விடுவார்கள். இந்திய ரெயில்வேயில் 120 நாட்கள் வரை பயணசீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது. இதனால் பலரும் பண்டிகை காலங்களில் 3 மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் ரெயில்களில் பயணசீட்டு முன்பதிவு செய்துகொள்ளும் காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரெயில்வே துறை குறைத்துள்ளது. அதே சமயம் பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
Next Story