பாஜகவின் IT பிரிவு மீது RSS உறுப்பினர் பாலியல் புகார்!
அமித் மாளவியா
பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநில பாஜக பார்வையாளராக இருந்த பாஜகவின் IT பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா, பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மீது RSS உறுப்பினர் சாந்தனு சின்ஹா புகார் தெரிவித்துள்ளார்.
அமித் மாளவியா மீது RSS உறுப்பினரே பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
5 நட்சத்திர ஓட்டல் மட்டுமல்ல மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகத்திலேயே பெண்களிடம் அமித் மாளவியா அத்துமீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டி வருகிறது.
Next Story