நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!

தேர்தல் ஆணையர் 

18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல்.

100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.8 கோடி முதல்முறை வாக்காளர்கள், மக்களவை தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் சேர இன்றைய இளம்தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்களில் 85.3 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.

ஏப்.1-ம் தேதி வரை 18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும்.

தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது.

மாலை, இரவு நேர்ஙகளில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை.

முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story