திருப்பதி லட்டு விவகாரம்: திங்கட்கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

திருப்பதி லட்டு விவகாரம்: திங்கட்கிழமை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!!

supreme court

திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்களை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பக்தர்களை உலுக்கிய திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்களை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.-யான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது. லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விரிவான தடயவியல் அறிக்கையையும் கோரி பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒய்.வி. சுப்பா ரெட்டி தாக்கல் செய்துள்ள மனுவில், நாயுடுவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை கோரியுள்ளார். முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை பிரசாதமாக தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story