நீட் தேர்வு வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கு கடுமையான தண்டனை - பீகார் அமைச்சரவை முடிவு !!

நீட் தேர்வு வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கு கடுமையான தண்டனை - பீகார் அமைச்சரவை முடிவு !!

அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் விமர்சனமாகவும் சர்ச்சையாகவும் இருக்கிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் போட்டி தேர்வுகளின் வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் என சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய பீகார் அமைச்சரவை முடிவு செய்தது.

நேற்று பீகார் மாநிலத்தில் சட்டசபை கூடியது. அப்போது சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி வினாத்தாள் கசிவு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசிய விடுபவர்களுக்கு இனிமேல் 10 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அந்த சட்டசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story