"இஸ்லாமிய குடும்பத்தோடு வாழ்ந்தவன்'' பிரிவினையை ஏற்படுத்தினேனா? ஷாக் ஆனா பிரதமர் மோடி !

இஸ்லாமிய குடும்பத்தோடு வாழ்ந்தவன் பிரிவினையை ஏற்படுத்தினேனா? ஷாக் ஆனா பிரதமர் மோடி !

 பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் நான்கு கட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளார். நேற்றைய தினம் அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து பிரதமர் மோடி இந்து - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தினால், நான் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சதவீதத்தில் முன்னிலையில் இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை தகவல் வெளியானது. இந்த நிலையில் ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் உங்கள் சொத்துக்களை எடுத்து அதிக பிள்ளை பெற்றவர்களுக்கு கொடுத்துவிடும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, '' தான் இஸ்லாமியர்களை தவறாக குறிப்பிட்டதாக கூறப்பட்டதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எவ்வளவு குழந்தைகளை வளர்க்க முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறியுள்ளேன். அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் பற்றி நான் பேசினால் அது எப்படி இஸ்லாமியர்களை பற்றி பேசியதாக ஆகும். இந்து குடும்பங்களில் கூட அதிக குழந்தைகளை பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் குழந்தைகளுக்கு சரியான கல்வியை கொடுக்க முடியவில்லை. தனது பேச்சில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.

சிறு வயதிலிருந்துஇஸ்லாமிய குடும்பத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறேன். ஆனால் 2002 ஆம் ஆண்டு முதல் தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்து முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அப்படி பிரிவினையை ஏற்படுத்தினால், நான் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவன்'' என கூறியிருக்கிறார்.

Tags

Next Story