பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தென்மேற்கு ரெயில்வே

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தென்மேற்கு ரெயில்வே

train

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் கும்பமேளாவை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் கும்பமேளாவை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06507) இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம் வடக்கு-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (06508) நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆல்வா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், மாவலிகரா, காயன்குளம், கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். எஸ்.எம்.வி.டி. பெங்களூரு- கலபுரகி சிறப்பு ரெயில் (06589) நாளை இரவு 9.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு கலபுரகியை சென்றடையும். கலபுரகி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (06590) இன்று மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) கலபுரகியில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் எலகங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி அகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கும்பமேளாவை முன்னிட்டு மைசூரு-பிரயாக்ராஜ் சிறப்பு ரெயில் (06215) இன்று அதிகாலை 3 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வழியாக புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு பிரயாக்ராஜை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story