தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய கிளை திறப்பு விழா

மெர்கண்டைல் வங்கி கிளை திறக்கப்பட்டது 

தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளை இன்று திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிட் ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி (பாரத ரிசர்வ் வங்கியின் அங்கிகாரம் பெற்றது), பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

வங்கியானது 560வது கிளையை ஹனுமகொண்டா, தெலுங்கானா மாநிலத்தில் ATM/CRM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது. 560வது கிளையை வாரங்கல் வர்த்தக மற்றும் தொழில் சங்கம் தலைவர் பொம்மினேனி ரவீந்தர் ரெட்டி துவக்கி வைத்தார்.

வங்கியின் மண்டல மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள். பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 560வது கிளையை ஹனுமகொண்டா, தெலுங்கானா மாநிலத்தில் ATM/CRM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது.

மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும்,

அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள்,

4 யூனியன் பிரதேசங்களில் 560 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கியினைப் பற்றி மேலும் தகவல்களை www.tmb.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Tags

Next Story