தெலுங்கானா எம்.எல்.ஏ கார் விபத்தில் உயிரிழப்பு !
எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா
பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37), கார் விபத்தில் உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் அம்மாநில பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்ஏவான லாஸ்யா நந்திதா காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதியது. படுகாயமடைந்த பி.ஆர்.எஸ். கட்சி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் அவர் பயணித்த கார் மீது ஆட்டோ மோதியதில் நடந்த சாலை விபத்தில் தலையில் காயம் ஏற்பட்தோடு லாஸ்யா நந்திதா தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குள்ளாக பத்தே நாட்களில் இரண்டாவது விபத்தில் தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கன்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சயன்னா ஓராண்டுக்கு முன்பு இறந்தததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தான் லாஸ்யாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதிலிருந்து 4 நாட்களில் மகள் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.