தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் நியமனம் !

தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் நியமனம் !

ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் 

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் இருந்து வந்தார். அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த கடிதத்தை திரௌபதி மூர்மு ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story