மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு!!

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு!!

sensex

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு/ Share markets stock markets BSE sensex surge 809 point also nifty surgedமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,182.74 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. நேற்று சென்செக்ஸ் 80,956.33 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் சற்று குறைந்து உயர்ந்து வர்த்தகம் ஆனது. மதியம் 12 மணியளவில் சட்டென சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. பின்னர் அப்படியே உயர்ந்து அதிகபட்சமாக 82,317.74 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மதியம் 2.50 மணிக்கு சுமார் 900 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது. சரிவை சந்தித்து உடனடியாக மார்க்கெட் உயரத் தொடங்கியது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,765.86 புள்ளிகளில் வர்த்தம் நிறைவடைந்தது. இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809.53 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த பட்சமாக 80,467.37 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82317.74 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 240.95 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவந்தது. நேற்று நிஃப்டி 24,467.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. இன்று காலை நிஃப்டி 24,539.15 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,295.55 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 24,857.75 நிஃப்டி வர்த்தகம் ஆனது. டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு 84.72 ரூபாயாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 84.75 ரூபாயாக இருந்த நிலையில் 84.72 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Tags

Next Story