அசாம் குடியுரிமை சட்ட பிரிவு செல்லும்: உச்சநீதிமன்றம்
supreme court
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியர வங்கதேசத்தினரை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வலியுறுத்தி கடந்த 1979 -ம் ஆண்டு தொடங்கி 1985-ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதில் குறிப்பாக மாணவர் அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர் அமைப்பினருக்கும் அரசுக்கும் இடையே ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. அதில், 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 24 நள்ளிரவுக்கு இடையில் குடியேறியவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. இந்த கால கட்டத்துக்கு பிறகு, மாநிலத்தில் குடியேறுபவர்கள் சட்டவிரோத வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அசாம் உடன்படிக்கையை அங்கீகரிக்கும் குடியுரிமை சட்ட பிரிவு 6ஏ செல்லும் என்றும் இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை மேற்கொள்ள பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.