பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் !

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் !

தேர்தல் ஆணையம்

பிரச்சாரங்களில் முன்வைக்கப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

மதவாத பிரச்சாரங்களை செய்வதை பாஜக தவிர்க்க வேண்டும் என்றும் சமூகத்தை பிளவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பை பாஜக அழித்துவிடும் என்றும் அக்னிவீர் போன்ற இந்திய பாதுகாப்புப் படைகளை அரசியலாக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளும் வரம்பை மீறுவது ஏற்புடையதல்ல என்றும் தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.

Tags

Next Story