தென்மேற்கு பருவமழை ஐந்து நாட்களுக்குள் கேரளாவில் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !!

தென்மேற்கு பருவமழை ஐந்து நாட்களுக்குள் கேரளாவில் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் !!

தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெய்து வருவது வழக்கம். கேரளாவை மையமாக வைத்திருந்த பருவமழை தொடங்கும் கேரளாவில் ஐந்து நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடம் ஒரு நாட்கள் முன்னதாக தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகூடும் தென் அரபிக் கடல் மாலத்தீவு பகுதி லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாக கூடும் மேலும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும் வடகிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டின் பல இடங்களில் பருவமழை ஆரம்பிக்கும் அதன்படி தமிழகத்திலும் படிப்படியாக பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வப்போது கேரளாவில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் அதனுடைய தாக்கம் தென்தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ளதால் இதனுடைய தாக்கமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story