அன்று நடைபாதையில் உறங்கிய எம்.எல்.ஏ.. இன்று ஒடிசா முதலமைச்சர்..!

அன்று நடைபாதையில் உறங்கிய எம்.எல்.ஏ.. இன்று ஒடிசா முதலமைச்சர்..!

மோகன் மாஜி

ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. ஓடிசவின் முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தான் ஒடிசாவின் முதல் முதல்வராக இன்று மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்.

ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 78 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை அக்கட்சி பெற்றது. ஒடிசாவில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

தற்போது ஒடிசாவை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் சரண் மாஜிக்கு வயது 53. பழங்குடியினத்தை சேர்ந்தவர் மோகன் மாஜி முதல்முறையாக 2004 ஆம் ஆண்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது தலைநகர் புவனேஸ்வரி வீடு ஒதுக்கப்பட தாமதமான நிலையில் நிலையில் அவர் நடைபாதையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

நடைபாதையில் தூங்கியபோது அவரது கைபேசி திருடு போனதாக அப்போதைய சட்டப்பேரவை தலைவரிடம் மோகன் மாஜி புகார் அளித்துள்ளார். பஞ்சாயத்து தலைவர், விவசாயி, ஆசிரியர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர். முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சருக்கான அரசு இல்லத்தை பயன்படுத்தாமல் தனது சொந்த இல்லதையே முதலமைச்சராக அலுவலகமாக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவின் முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்கும் விழா இன்று (புதன்கிழமை) புவனேஸ்வரின் ஜனதா மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த பா.ஜனதா தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story