உதயநிதி மீது புதிய வழக்கு பதியக்கூடாது: உச்சநீதிமன்றம்

உதயநிதி மீது புதிய வழக்கு பதியக்கூடாது: உச்சநீதிமன்றம்
X

supreme court

உதயநிதி மீது புதிய வழக்கு பதியக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை கடுமையான விமர்சனம் செய்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க. மற்றும் வலதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களையும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது. அப்போது, சனாதன தர்மம் பேச்சுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சென்னை இல்லையென்றால் கர்நாடகாவிற்கு மாற்ற வேண்டும். இதைவிட அதிகமான விமர்சனம் வைத்த நுபுர் சர்மா, அர்னாப் கோஸ்வாமி ஆகியோரின் வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது என்று உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டது. மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில், சனாதனம் விவகாரத்தில் துணை முதலமைச்சர் irresponsible முறையில் பேசி உள்ளார். குறிப்பிட்ட சமூகத்தை கொரோனா மற்றும் கொசுக்களை போல் அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியது மிக மோசமானது என்ற வாதம் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, உச்சநீதிமன்ற அனுமதியின்றி சனாதன வழக்கில் உதயநிதி மீது புதிய வழக்கு பதியக்கூடாது என்றும் வழக்கில் அனைத்து எதிர்மனுதாரர்களும் பதிலளிக்க நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டது.

Tags

Next Story