அம்பானி குடும்ப நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படையை களமிறக்கிய ஒன்றிய அரசு!
அம்பானி-ராதிகா
கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 4 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த அனந்த் அம்பானி-ராதிகா திருமண நிகழ்ச்சியின் போது, குஜராதின் ஜாம்நகர் விமான நிலைய செயல்பாடுகளை ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் இந்திய விமானப்படை கையாண்டுள்ளது.
அந்த 10 நாள்களில் ஜாம்நகரில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகளை இந்திய விமானப்படை 24 மணிநேரமும் கண்காணித்து விமான நிலையத்தை நிர்வகித்துள்ளது.
மேலும், ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படையின் தொழில்நுட்ப பகுதிகளையும் பயன்படுத்த தனியார் விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜாம்நகர் விமான நிலையத்தில் புதிய சாலைகள், டாக்ஸி தடங்கள் உட்பட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ளது.
ஜாம்நகர் விமான நிலையத்திற்கு அம்பானியின் குடும்ப நிகழ்ச்சிக்காக தற்காலிக சர்வதேச விமானநிலைய அந்தஸ்து வழங்கியும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.