கேரளாவில் கொட்டித்தீற்க்கும் மழை !!
மழை
கேரளா மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது அதிலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டிருப்பதன் காரணமாக சில நாட்களாக கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மழையின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்மாவட்டங்களில் 23ஆம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி அளவை விட இருமடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.
இந்த ஒரு வார காலத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 171 சதவீதமும், கோழிக்கோட்டில் 132 சதவீதமும், மாஹே பகுதியில் 160 சதவீதமும், வயநாட்டில் 95 சதவீதமும் மழை பதிவாகியிருக்கிறது.