ஆந்திரா ரயில் விபத்து : மத்திய- மாநில அரசுகள் நிவாரணம்

ஆந்திரா ரயில் விபத்து : மத்திய- மாநில அரசுகள் நிவாரணம்

ரயில் விபத்து

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டு 13 பேர் உரிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் விபத்து காரணமாக 3 ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 ரயில்கள் மாற்று திசையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் அதே தண்டவாளத்தில் காத்திருக்கும் 3 ரயில்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்படும் என்றும் பிற மாநிலப் பயணிகளைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story