சரியான நேரத்தில் வாகனத்தை வழங்க தவறிய ஊபர் நிறுவனத்திற்கு ரூ.54,000 அபராதம்!!

சரியான நேரத்தில் வாகனத்தை வழங்க தவறிய ஊபர் நிறுவனத்திற்கு ரூ.54,000 அபராதம்!!

Uber

நிதி இழப்புகள், சிரமம் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றிற்காக ரூ.54,000 இழப்பீடாக வழங்க ஊபர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரியான நேரத்தில் வாகனத்தை (cab) வழங்கத் தவறியதற்காக ஊபர் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பயனர் தனது விமானத்தை தவறவிட்டார். நிதி இழப்புகள், சிரமம் மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றிற்காக ரூ.54,000 இழப்பீடாக வழங்க ஊபர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லியில் வசிக்கும் உபேந்திர சிங், கடந்த 2022-ம் ஆண்டு இந்தூருக்கு விமானத்தைப் பிடிக்க அதிகாலை 3:15 மணிக்கு ஊபர் வண்டியை முன்பதிவு செய்தார். வண்டி சரியான நேரத்திற்கு வரவில்லை. இதனால் உபேந்திர சிங் ஊபர்-ஐ தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதிலும், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. உள்ளூர் டாக்ஸியை பிடித்து விமான நிலையத்தை அடைந்த உபேந்திர சிங்கும் அவரது மனைவியும் விமானத்தை தவறவிட்டனர். ஊபர் சேவை தோல்வியால் விரக்தியடைந்த சிங், ஊபர் நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. பின்னர் உபேந்திர சிங் ஊபரின் சேவையில் குறைபாடு எனக் கூறி, டெல்லி நுகர்வோர் ஆணையத்தில் முறையான புகார் ஒன்றை அளித்தார். நுகர்வோர் ஆணையம் உபேந்திர சிங்கிற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, ஊபர் நிறுவனத்தை பொறுப்பேற்க வைத்தது. உபேந்திர சிங்கிற்கு ரூ.54,000 இழப்பீடு வழங்குமாறு ஊபர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நிதி இழப்பு மற்றும் சிரமத்திற்கு ரூ.24,100, மன உளைச்சல் மற்றும் சட்டச் செலவுகளுக்கு ரூ.30,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story