வேலையின்மை 10% ஆக குறைந்திருக்கிறது - நிர்மலா சீதாராமன்

வேலையின்மை  10% ஆக குறைந்திருக்கிறது - நிர்மலா சீதாராமன்

 நிர்மலா சீதாராமன் 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமர்பித்தார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "நாடு முழுவதும் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேலும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பிறகு வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2017-2018 காலக்கட்டத்தில் 17.8 சதவிகிதமாக இருந்த வேலையின்மை 2022-2023ல் 10% ஆக குறைந்திருக்கிறது.

தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் பணவீக்கம் 4.5 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் நிலையான வளர்ச்சி 4.18 சதவீதமாக இருக்கிறது. 2023-24-ல் வேளாண் துறை தற்காலிக வளர்ச்சி 1.4 சதவீதமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கிறது.'' எனக் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story