மத்திய அமைச்சராக பதவியேற்ற எல்.முருகன்.. முதலில் போட்ட கையெழுத்து!

மத்திய அமைச்சராக பதவியேற்ற எல்.முருகன்.. முதலில் போட்ட கையெழுத்து!

எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.முருகன் கடந்த ஆட்சியில் தகவல், ஒளிபரப்பு துறையுடன், கால்நடைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

இந்த முறை தகவல், ஒளிபரப்பு துறையுடன், கூடுதலாக நாடாளுமன்ற விவகார துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன், முறைப்படி பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்ற அவருக்கு, ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், தனது இருக்கையில் அமர்ந்து, கோப்புகளில் கையெழுத்திட்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தனது பணியை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2வது முறையாக மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story