மோடியை வரவேற்கும் வாரணாசி தொகுதி !

மோடியை வரவேற்கும் வாரணாசி தொகுதி !

பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி, பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2014, 2019 தேர்தல்களில் வாரணாசியில் வென்ற பிரதமர் மோடி மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்கிறார்.

அதனால் பிரதமர் மோடி வருகையையொட்டி மாலை, தோரணங்கள், கலைநிகழ்ச்சிகள் என வாரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு மத்தியில் கங்கை நதிக்கு 400 மீட்டர் சேலையை பாஜகவினர் வழங்கினர்.

சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்ட இருக்கும் பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story