புயல் மழையால் திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து!!

புயல் மழையால் திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து!!

Tirupati 

திருப்பதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஏழுமலையான் கோவிலில் நாளை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் தென் கடலோரம், ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு அரபிக்கடலில் நகர்ந்து மீண்டும் வலுப்பெறும் என்பதால் ஆந்திராவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.ஐ.பி பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்களை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். திருப்பதியில் நேற்று 75,361 பேர் தரிசனம் செய்தனர். 28,850 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags

Next Story