வயநாடு நிலச்சரிவு - பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு

வயநாடு நிலச்சரிவு - பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு

 பிரதமர் மோடி

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 30ம் தேதி கேரளா வயநாட்டில், முண்டக்கை, சூரல்மலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

30 மணி நேரத்தில் ராணுவத்தினர் அமைத்த பெய்லி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்து அதனை கட்டமைத்தவர்களுடன் கலந்துரையாடினார். வெள்ளாரமலை பாலத்தையும் ஆய்வு செய்தார்.

இதன் பிறகு, முண்டக்கை, சூரமலை பகுதிகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது கவர்னர் ஆரிப்கான், அமைச்சர் சுரேஷ்கோபி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மோடியிடம் விளக்கம் அளித்தனர்.

சூரல்மலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என மோடி உறுதி அளித்தார். உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story