மேகங்களுக்கு நடுவே இருந்ததா ஏலியன்கள்? விமான பயணி எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு.

மேகங்களுக்கு நடுவே இருந்ததா ஏலியன்கள்? விமான பயணி எடுத்த புகைப்படத்தால் பரபரப்பு.

ஏலியன்கள்?

மேகங்களுக்கு நடுவே ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட விமான உருவங்களை விமான பயணி ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இவைகள் ஏலியன்களாக இருக்குமா என்பதை கண்டறிய இந்த புகைப்படம் ஆய்வு செய்யப்படுகிறது.

சமூக ஊடகங்களில், ஒருவர் போலந்து நாட்டின் வார்சாவில் இருந்து லண்டனுக்கு சென்றபோது பயணி ஒருவர் ஜன்னல் அருகே அமர்ந்து மேகங்களை படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

திடீரென்று அவரது புகைப்படம் ஒன்றில் சில நிழல்கள் பிடிக்கப்பட்டன. ஒரு வேற்றுகிரகவாசியின் (ஏலியன்) முழு குடும்பமும் மேகங்களுக்கு இடையில் நிற்பது போல் அந்த புகைப்படம் தோன்றியது.

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த படத்தின் உண்மை தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வைரலாக பரவிய இந்தப் படத்தை எடுத்தவர் அதனை MUfON என்ற தளத்திற்கு அனுப்பினார். இந்த தளம் ஏலியன்கள் தொடர்பான அப்டேட்டுகளை ஆவணப்படுத்தி வருகிறது.

அத்துடன், வார்சாவில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் தனது ஜன்னலில் இருந்து பார்த்தபோது, ​​​​இடதுபுறத்தில் ஏலியன்கள் கூட்டமாக இருப்பது போன்ற காட்சியை கண்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன் அது வைரலானது.

பின்னர் இந்த புகைப்படம் YouTube இல் பகிரப்பட்டது, அங்கு இந்த புகைப்படம் பல கோடி முறைகள் பார்க்கப்பட்டன.

இதன் பின்னர், இந்த படம் உண்மைதானா அல்லது வானத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதங்கள் எழுந்தன.

பலர் இதை வேற்றுகிரகவாசிகளின் குடும்பத்தின் படம் என்று வர்ணித்தனர். இருப்பினும், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் புகையாக இருக்கலாம் என்று சிலர் கமென்ட் செய்துள்ளனர்.

Tags

Next Story