ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிநிர்வாகி வெட்டிப் படுகொலை!!

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிநிர்வாகி வெட்டிப் படுகொலை!!

 வீடியோ

ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டம் விணு கொண்டாவை சேர்ந்தவர் ஷேக் ரஷீத் (வயது 25) இவர் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்.

இவர் முண்டலா முரு பஸ் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். கடந்த தேர்தலுக்கு முன்பு இவருடைய நண்பன் ஷேக் ஜிலானி என்பவர் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தேர்தலின் போது ஷேக் ரசித், சேக் ஜிலானி வீட்டிற்கு சென்று அவரது பைக்கை தீட்யிட்டு எரித்தார். இதனால் ஷேக் ரஷீத் மீது ஜிலானிக்கு கடும் ஆத்திரம் உண்டானது.

இந்த நிலையில் நேற்று இரவு மதுபானம் கடையில் வேலை முடித்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட சென்றுள்ளார். அங்கு வந்த ஷேக் ஜிலானி தன் வைத்திருந்த கத்தியால் ரசித்தை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளார்.

அவரது கை துண்டாகி விழுந்த நிலையில் ரசித் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார். அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். ஒருவரும் கொலை தடுக்க முன் வரவில்லை. இதை அடுத்து ஜில்லானி அங்கிருந்து தப்பி ஓடினார்.

அருகில் இருந்தவர்கள் ஷேக் ரசித்தை மிட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிலானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேக் ரசித் வெட்டி கொல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story